📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:39:45
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

கோபி பேருந்து நிலையத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செய்தி சுருக்கம்: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவினை மீறி முருக பக்தர்களை அவமானம் செய்த தமிழக அரசினை கண்டித்து இந்து முன்னணி சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டமானது ஈரோடு மேற்கு மாவட்டம் கோபி நகர் இந்து முன்னணியின் சார்பாக மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கோபி பேருந்து நிலையத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவினை மீறி முருக பக்தர்களை அவமானம் செய்த தமிழக அரசினை கண்டித்து இந்து முன்னணி சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டமானது ஈரோடு மேற்கு மாவட்டம் கோபி நகர் இந்து முன்னணியின் சார்பாக மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.. இதில் பாஜக ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குமார், பாஜக மாவட்ட பொது செயலாளர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. இதில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் தமிழ்செல்வன், சம்பத், மணிகண்ட பிரபு, இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் கிருத்திகா,மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமல் குமார்.பாஜக கோபி நகர தலைவர் மகேஸ்வரன்,இந்து முன்னணி, கோபி நகர துணைத்தலைவர் கருப்புசாமி, நகர செயலாளர்கள் ஸ்ரீதர்,மனோஜ்,ராஜா,கோபி நகர தலைவி சரண்யா, பாஜக மாவட்ட செயலாளர் திருமூர்த்தி, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் நந்தினி தேவி, மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் கௌதம சங்கரன், மாவட்ட தன்னார்வ தொண்டு பிரிவு தலைவர் கணேசன், கோபி மேற்கு ஒன்றிய தலைவர் விஸ்வநாதன், கிழக்கு ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, டி என் பாளையம் மேற்கு ஒன்றிய தலைவர் சுதாகர் உள்ளிட்ட இந்து முன்னணி, பாஜக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்...இதில் கலந்து கொண்ட அனைவரும் கோபி காவல்துறையினர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
வெளியிடப்பட்ட தேதி 08/12/2025 | பார்வைகள்: 59

x