📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
02/10/2026 11:33:15
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

ஈரோடு வழக்கறிஞர் அருள் முருகனுக்கு பாராட்டு விழா

செய்தி சுருக்கம்: தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வெற்றிபெற்றதையொட்டி ஈரோடு சட்டக் கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு முன்னாள் நீதிபதி கே.என். பாஷா பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்துக் கௌரவித்தார்.
கோபி. மொடச்சூர் . அக்டோபர். 2.ஈரோடு சட்டக் கல்லூரி சார்பில் ஈரோட்டை சேர்ந்த வழக்கறிஞர் அருள் முருகன் அவர்கள் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வெற்றிபெற்றதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நடத்தியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா அவர்கள் திரு. அருள் முருகன் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்துக் கௌரவித்தார். நிகழ்விற்கு விழாவிற்கு கல்லூரித் தலைவர் திரு. சிந்து ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காயத்ரி ரவிச்சந்திரன், இணைச் செயலாளர் அருண் பாலாஜி மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர். கஜேந்திரராஜ், துணை முதல்வர் டாக்டர். அக்பர் அலி பெய்க் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
வெளியிடப்பட்ட தேதி 02/10/2026 | பார்வைகள்: 3

x