📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
02/10/2026 11:32:31
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

ஈரோடு சட்டக் கல்லூரியில் இந்திய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டி நிறைவு விழா

செய்தி சுருக்கம்: சேலம் மத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசு – சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என். பாஷா வழங்கினார்.
ஈரோடு சட்டக் கல்லூரியின் இரண்டாவது தேசிய அளவிலான லெக்ஸ் ப்ருடென்ஷியா 2026 “சுற்றுச்சூழல், செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான மாதிரி நீதிமன்றப் போட்டிகள் நாட்களாக நடைபெற்றது. 29-09-2026 அன்று நடைபெற்ற நிறைவு விழா ஸ்ரீ சாய் சிந்து கல்வி குழுமங்களின் தலைவரும், தனியார் சட்டக்கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவருமான சிந்து ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர். கஜேந்திரராஜ் வரவேற்புரையாற்றினார்.
இப்போட்டிக்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என். பாஷா அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். துணைத் தலைவர் காயத்ரி ரவிச்சந்திரன், இணைச் செயலாளர் திரு. வி.ஜி. அருண் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞரும் பார் கவுன்சில் உறுப்பினருமான திரு. அருள் முருகன், மூத்த வழக்கறிஞர் திரு. ராஜா, செயற்கை நுண்ணறிவுப் பொறியாளர் (AI Engineer) திரு. விஜய், ஆனந்தம் சட்டக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திரு. பிரபாகர் மற்றும் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் டாக்டர். கருப்பசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தியா முழுவதிலுமிருந்து 40 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று தங்கள் சட்ட அறிவு, வாத திறன், வழக்கு நடத்தும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தினர். சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் 'டீம் அஸ்ட்ரா' (Team Astra - முகமது சாஃபி, அஞ்சிஷ்ரேயா, சினிதா) சேர்ந்த மாணவர்களுக்கு முதல் பரிசான பிரம்மாண்டமான சுழற்கோப்பை, ரூ.18,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியின் 'டீம் டெம்பஸ்' (Team Tempus - பிரடீனா சாஜி, அம்ருதா, ஆயிஷா ஃபைசல்) மாணவர்களுக்கு இரண்டாம் பரிசான சுழற்கோப்பை, ரூ.10,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறந்த ஆண் பேச்சாளர் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியின் 'டீம் வெரிடாஸ் முகமது சாஃபி- க்கும், சிறந்த பெண் பேச்சாளர் விவிதா விலாசினி- க்கும், சிறந்த ஆராய்ச்சியாளர் விருது தாரிகா - க்கும் வழங்கப்பட்டது.

பார் கவுன்சில் உறுப்பினர் அருள் முருகன் அவர்கள் பேசுகையில்: “சிந்தனையின் தெளிவிலும், நம்பிக்கையின் தைரியத்திலும்தான் வாதாடும் கலை அடங்கியுள்ளது. மாதிரி நீதிமன்றப் போட்டிகள் இளம் மனங்களை நீதிமன்றச் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயார்படுத்துகின்றன” என்று குறிப்பிட்டார்.
துணை முதல்வர் டாக்டர். அக்பர் அலி பெய்க் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். துணை பேராசிரியர் ஹரிப்பிரியா நன்றியுரையாற்றினார்.
வெளியிடப்பட்ட தேதி 02/10/2026 | பார்வைகள்: 11

x