📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
06/10/2026 17:12:11
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

கோபி கலை அறிவியல் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா

செய்தி சுருக்கம்: எளிமையான ஆடை, தூய்மையான எண்ணம், மத நல்லிணக்கத்தை கடைபிடிப்பதே காந்தியடிகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி – முனைவர் சங்கரராமன்
கோபி கலை அறிவியல் கல்லூரி இளம் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சாந்தம் கல்வி சேவை அறக்கட்டளை இணைந்து நடத்தும் 22 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் டி வேணுகோபால் தலைமை தாங்கினார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு கே எஸ் ஆர் தொழில்நுட்பக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சங்கரராமன் கலந்து கொண்டு காந்தியடிகளின் முக்கிய கொள்கைகளான எளிமையான ஆடை தூய்மையான எண்ணம் மற்றும் மத நல்லிணக்கணம் நம் வாழ்வில் கடைபிடிப்பதை நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் அவரது அகிம்சை வழியை பின்பற்றி நாட்டை உயர்த்துவோம் என்று சிறப்புரையாற்றினார்.
உலக வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி கல்லூரி மாணவ மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக சாந்தம் கல்வி சேவை அறக்கட்டளை உறுப்பினர்கள் ஹரி கேசவ் மற்றும் மகாலட்சுமி வாழ்த்துரை வழங்கினர். விழாவில் முன்னதாக இணை பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே ராஜேந்திரன் வரவேற்புரை நல்க முடிவில் சாந்தம் கல்வி சேவை அறக்கட்டளை செயலாளர் திரு கவி வரதராஜன் அவர்கள் நன்றி உரை நல்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை சாந்தம் சேவை அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்கம் திட்ட அலுவலர்கள் திருமதி மல்லிகா திருமதி அன்பு செல்வி கிருஷ்ணவேணி செய்திருந்தனர்.
வெளியிடப்பட்ட தேதி 06/10/2026 | பார்வைகள்: 6

x