📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
02/11/2026 00:19:11
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

கோபி கலை அறிவியல் கல்லூரிக்கு 2024-2025 கல்வி ஆண்டுக்கான Institution’s Innovation Council (IIC) நான்கு நட்சத்திர மதிப்பீடு

செய்தி சுருக்கம்: செய்தி சுருக்கம்: கோபி கலை அறிவியல் கல்லூரியின் Institution’s Innovation Council (IIC) அமைப்பின் 2024-2025 கல்வி ஆண்டிற்கான செயல்பாடுகளைப் பாராட்டும் விதமாக, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் (MoE) INNOVATION CELL சார்பில் நான்கு நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.
கோபி கலை அறிவியல் கல்லூரிக்கு 2024-2025 கல்வி ஆண்டுக்கான
Institution’s Innovation Council (IIC)
நான்கு நட்சத்திர மதிப்பீடு*

கோபி கலை அறிவியல் கல்லூரியின் Institution’s Innovation Council (IIC) அமைப்பின் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான செயல்பாடுகளைப் பாராட்டும் விதமாக, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் (MoE), INNOVATION CELL நமது கல்லூரிக்கு நான்கு நட்சத்திர மதிப்பீடு வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. இம்மாபெரும் பெருமை கிடைப்பதற்காக கல்லூரியின் செயல்பாடுகளில் புதுமை, தொழில் முனைவு, படைப்பாற்றல் மற்றும் பண்பாடு சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் மேம்பாடு அடையும் வகையில் செயல்பட்ட கல்லூரியின் IIC குழுமத்தினர், பேராசிரியர்கள், மாணாக்கர், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரையும் பாராட்டும் விதமாகப் பாராட்டு விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் IIC துணைத் தலைவர் முனைவர் இ. பி. செங்கோட்டுவேல் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் IIC தலைவரும் கல்லூரி முதல்வருமாகிய முனைவர் தெ.வேணுகோபால், துணை முதல்வர்கள் முனைவர் ம. சுதாகர், முனைவர் ந.சக்திவேல் மற்றும் IIC ஆலோசனை குழு உறுப்பினர் முனைவர் முனைவர் எம் சரவணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப் பாராட்டினர்.


வாழ்த்துரை வழங்கிய அனைவரும், கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் கலைக்கல்லூரிகளிலேயே மிகவும் முன்னிலை வகிக்கக் கூடிய கல்லூரியாக கோபி கலை அறிவியல் கல்லூரி உயர்ந்துள்ளதை மகிழ்வோடு பகிர்ந்துகொண்டு பாராட்டினர்.


நிறைவாக IIC ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ. அழகரசி நன்றி உரை வழங்கினார். விழாவில்> அனைத்துத் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
வெளியிடப்பட்ட தேதி 07/10/2026 | பார்வைகள்: 31

x