📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
02/11/2026 00:20:03
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கவுந்தப்பாடியில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

செய்தி சுருக்கம்: உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கவுந்தப்பாடி நால்ரோட்டில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உயர்நீதிமன்ற திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணியின் சார்பாக கவுந்தப்பாடி நால்ரோட்டில் ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..இதில் மாவட்ட செயலாளர்கள் முருகேசன்,சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

*இந்து முன்னணி பேரியக்கத்தின் திருப்பூர் கோட்ட செயலாளர் பாலமுருகன் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்*..

மாவட்ட துணை தலைவர்கள் கார்த்திக் சிதம்பரம்,கோபிநாத்,மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன்,மாவட்ட செயலாளர்கள் தமிழ்செல்வன்,மணிகண்ட பிரபு,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா,விமல்குமார்,பெரியசாமி,ராமசாமி,இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரண்யா மற்றும் பெண்கள்,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் தீபதூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன..
செய்தியாளர்.என் சிவக்குமார்
வெளியிடப்பட்ட தேதி 12/10/2026 | பார்வைகள்: 36

x